முதலமைச்சு பதவி தவத்திற்கா? தவம் பதில்!

அ.றஹ்மான்-

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்ற கேள்வி அனைவரினதும் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

இதேவேளை இன்றைய தினம் முதலமைச்சு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி பிரசுரித்தது.

 இது தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்....

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தொடர்பாக இன்று இணையதளங்களில் வெளிவந்திருக்கும் செய்திகளில் என்னையும் தொடர்புபடுத்தியிருப்பது, அவர்களின் சுதந்திரமான கருத்தேயன்றி, என்னுடைய கருத்தல்ல.

இக்கருத்துக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் தெரிவித்தார்.


குறிப்பிட்ட செய்தி..


கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ள நிலையில் முஸ்லிம் கங்கிரஸ் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுள் அமைச்சர்கள் மன்சூர் மற்றும் ஹாபீஸ் ஆகியோர் “புரன்ட் ரன்னர்ஸ்” ஆக இருந்தனர் .

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம்(அல் தவாம்) இந்த “புரன்ட் ரன்னர்ஸ் பன்ச்”இல் இணைந்துகொண்டுள்ளதாக அக்கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் மூலம் அறியக்கிடைத்தது.

தேசிய காங்கிரசின் கோட்டை எனக்கருதப்படும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனது கால் தடத்தை மிக வலிமையாக பதித்து கொள்ள பிரதேசத்தை சேர்ந்த தவத்தை முதலமைச்சராக்கும் நகர்வை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக அராய்ந்துவருவதாக தெரிவிக்கபடுகிறது.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த தவம் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல் தவாம் தலைமைதுவத்துக்கு மிக மிக விசுவாசமானவர் என்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -