ஸ்ரீ.மு.கா.யின் கோரிக்கைகள் பல அரசினால் இன்று அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் கோரிக்கையை ஏற்ற அரசு இன்று பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்மந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:

கிழக்கில் முஸ்லிம், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம்கள், மற்றும் இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அரசு சார்பாக லலித் வீரதுங்க குழுவினருடன் கலந்துகொண்டு நடாத்திய பேச்சுவார்த்தையில் பலவிடையங்கள் பேசப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து இன்று காலை அம்பாரை மாவட்ட இராணுவப்பொறுப்பதிகாரி லால்பெரேரா என்னை தொடர்பு கொண்டு ஒலுவிலில் இருக்கின்ற கடற்படை முகாமை இன்று அகற்றுகிறோம் என்று எனக்குத்தெரிவித்தார்.

அதுபோன்று கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்பாக திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக் மற்றும் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் இன்னும் சிலருடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். அதன்பலனாக இன்று கருஇமலையூற்று பள்ளிவாசல் அங்குள்ள முஸ்லிம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று திருக்கோணமலை மாவட்டப்பகுதியான கிலப்பன் வேர்க் இராணுவ முகாமினால் தடைசெய்யப்பட்டிருந்த கரைவலை மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையை நீக்கவேண்டும் என்று .   பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பஷீர், திருக்கோணமலை பாராளுமன்ற உருப்பினர் தெளபீக் கிழக்கு முதலமைச்சர்ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களிடம் உரையாடியதன் பலனாக இன்று அந்த தடையும் நீக்கப்பட்டு உடனடியாக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றும் தம்புள்ள
பள்ளிவாசல்,  கிரன்பாஸ் பள்ளிவாசல் சம்மந்தமாக
உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்றும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் இன்னும் எனக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -