பள்ளிகள் உடைக்கப்படுவது சகஜம், ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களிப்பது கடமை-அமைச்சர் அதாஉல்லா

அவதானி-
னாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று இரவு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் கிழக்கு மாகாணசபை வீதிஅபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

இப்பிரச்சாரப்பொது கூட்டத்திற்கு பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்துகொண்டு நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

உரையின் சுருக்கம்:

இந்த நாட்டில் கடந்த 30 வருடகாலமாக புலிப்பயங்கரவாதிகளால் மக்கள் நின்மதியிழந்து அல்லோல கல்லோலப் பட்டு உயிர்களையும், உடமைகளையும், சொத்துக்களையும், இழந்து தவிர்த்துக்கொண்டிருந்த காலமாக இருந்த இலங்கையை இன்று எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் சந்தோஷமாக வாழும் ஒரு நாடாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாற்றியிருக்கிறார். பெரும் யுத்தத்தை முடித்து புலிகளை அழித்து இல்லாமல் செய்திருக்கிறார். அவருக்கு இலங்கைவாழ் மக்கள் அனைவரும் எந்த முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்பதனைப் அறிந்து, புரிந்து நன்றி செலுத்த வேண்டும்.

இலங்கை நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாதிபதிக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். பள்ளிகள், கோயில்கள், பன்சலைகள், உடைத்தல், சண்டை பிடித்தல், என்பன சாதாரணமாக எல்லா இடங்களிலும் இடம்பெறுவது வழக்கம். அதற்காக நாம் குறைகூறிக்கொண்டு இருப்பது நியாயமாகது. எனவே நாம் நன்றியுடையவர்களாக இருந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்யவேண்டும் என்று கூறினார்.

தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் உரைநிகழ்த்திய இக்கூட்டத்திற்கு உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் சமூகமளித்திருந்தனர்.

இப்பிரச்சாரக்கூட்டத்தில் நூற்றுக்கணகான பொதுமக்கள் கலந்து கொண்டமையும், இதற்கு முதல் நாள் அமைச்சரின் ஊரான  அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்துக்கு பொதுமக்கள் குறைவாகவே சென்றிருந்தார்கள் என்பதும் அவதானியின் கருத்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -