மைத்திரிபால சிறிசேனைவை ஏற்றுக்கொள்ள முடியாது

பொது வேட்பாளராக சந்திரிக்கா வந்தால், அல்லது ரணில் வந்தால் அல்லது சஜித் வந்தால் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்த மனசு இப்போது மைத்திரியை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது.

இதற்குக் காரணம்..

மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்கெதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட சில சிங்கள இயக்கங்களின் வாய்களை பொத்தாது, கைகளை முடக்காது விட்டதனால்த்தான் முஸ்லிம்களின் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு பாரிய வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதே அரசாங்கத்தில் முக்கிய பங்காற்றிய, முக்கிய பதவியில் இருந்த, முக்கிய உறுப்பினராக இருந்த ஒருவர்தான் பொதுவேட்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மைத்திரிபால அவர்கள். முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டே, டிலான் பெரேரே, வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா போன்றோர் குரல் கொடுத்தார்கள் ஆனால் அந்த நேரம் மைத்திரிபால என்ன செய்தார்...??? ஒரு குரலாவது முஸ்லிம்களுக்காக எழுப்பினாரா...??? ஒரு கண்டனம்தான் தெரிவித்தாரா...??

அரசாங்கத்தின் சார்பாக அரசாங்கத்தின் கருத்துக்களைத்தானே மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

எதிர்கட்சியினைக் எடுத்துக் கொண்டாள், கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பினார், முஸ்லிம் அமைச்சர்களும், தலைவர்களும் குரல் கொடுத்து பேசாது ஊமையாக இருந்த அந்த நேரம் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசியது முஸ்லிம் மக்களுக்கு இனவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. சஜித் பிரேமதாச அவர்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

பொதுவேட்பாளராக ரணில் வந்திருந்தால், அல்லது சஜித், சந்திரிக்கா வந்திருந்தால் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் தாராளமாக ஏற்றுக் கொள்ள இருந்தார்கள் ஆனால் மைத்திரியின் வருகை ஐ.தே.கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் சரியான முடிவு எடுக்காது விட்டு விட்டதோ என்றே சொல்லத் தோனுகிறது.

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த, முஸ்லிம்கள் நேசித்த ரணிலாக இருந்தாலும் சரி, சந்திரிக்காவாக இருந்தாலும் சரி, சஜித்தாக இருந்தாலும் சரி மைத்திரிபால ஜனாதிபதியானால் அவர்கள் எல்லாம் இவர் முன் கைகட்டியே நிற்க வேண்டும்.

எப்படி பண்டாரநாயக்க குடும்பத்தின் ஐ.ம.சு. கட்சியினை மகிந்த அவர்கள் கைப்பற்றி ஆட்சிபீடம் ஏறினாரோ அதே போல் ஐக்கிய தேசிய கட்சியின் கயிற்றைப் பிடித்து ஆட்சிபீடம் ஏறி மைத்திரியும் ஒரு மகிந்த போல செயற்படமாட்டார் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை.

சம்மாந்துறை அன்சார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :