நாட்டில் இருந்து கட்டாருக்கு பயணமா கொஞ்சம் நின்று இதனைப் படியுங்கள் முதலில்

குடும்பத்தை விட்டு, வீட்டை விட்டு, நாட்டை விட்டு தானும் தனது குடும்பமும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தொழில் நோக்கம் அடிப்படையில் வந்திருக்கும் நபா்களின் குடும்பங்கள் தனது மகனுக்காக, அன்பான கணவனுக்காக, உறவுகளுக்குாக வீட்டில் செய்யப்படும் உணவுகள் இன்னும் பல பொருட்களை வெளிநாட்டுக்கு வருபவா்களிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இனிப்புக்கள், மருந்து மாத்திரைகள், மிக்சா்கள், எண்ணெய் வகைகள், சமஹன் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இவை மட்டு மன்றி சிலா்
வெற்றிலை
பாக்கு
சுண்ணாம்பு
புகையிலை
பீடா
பான்பராக்கு
தூக்க மாத்திரை
போன்றவற்றையும் அனுப்புவதையும் கண்டு கொள்ள முடியும்.

ஆரம்ப காலங்களில் நிலை எவ்வாறு இருந்தது என்று தெரிய வில்லை. ஆனால் அண்மையில் கட்டாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் சோதனை மிகக் கடுமையான முறையில் நடைபெறுவதன் காரணமாக சந்தேமாக பொருட்கள் மிகக் கடுமையான முறையில் சோதிக்கப்படுவதோடு அவா்கள் தனிப்பட்ட முறையில் தீவிரமாக விசாரிக்கவும் படுகின்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் இலங்கையில் இருந்த வந்த சகோதரா் ஒருவரிடம் மிக தீரமாக முறையில் விசாரனை நடைபெற்றுள்ளது மட்டு மல்லாமல் அவா் கொண்டு வந்த அனைத்து பொருட்களும் ஒன்று ஒன்றாக பிரித்து சோதிக்கப்பட்டு அதில் காணப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் இது என்ன? அது என்ன? என்று விளக்கம் கேட்கப்பட்டு, அவா் கொண்டு வந்த பார்சலில் வெற்றிலை இருப்பதை கண்டு அதற்கும் விளக்கம் கேட்கப்பட்டு கடைசியில் வெற்றியையை திண்டு காட்டு என்று உண்ணக் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று பாக்குகள், நாளைந்து வெற்றிலைகள், பாதிப் புகையிலை , அரைப் பைக்கட் சுண்ணாம்பு இவை அனைத்துயும் உண்டால் என்னவாகும் என்று நீங்கள் கற்பனைப் பன்னிப் பாருங்கள்.

கடைசியில் ஒரு வாராக விளக்கி சிறிதளவு உண்டு காட்டி அந்த இடத்தை விட்டு மிகுந்த கஸ்டத்துக்கு மத்தியில் அங்கிருந்து தமது இருப்பிடம் வந்து சோ்ந்து இருக்கின்றார். அது மட்டு மல்லாமல் சுமார் 500 கிராம் அளவுக்கு வில்லைகள் இருப்பதைக் கண்டு ஒவ்வொரு வில்லையையும் காட்டி இது எதற்கு குடிக்கும் வில்லை, அது எதற்கு குடிக்கும் வில்லை? ஏன் நீங்கள் நாட்டிலிருந்து கொண்டு வரவேண்டும்? இங்கு தான் அனைத்து விதமான வில்லைகளையும் பெற முடியுமே என்டு பல வாராக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டள்ளன.

நாட்டிலிருந்து வந்த குறித்த நபா் ஏற்கனவே இங்கிருந்து நாடு சென்று திரும்பி வந்தவா். அரபு மொழி தெரியும் என்பதன் காரணமாக பரிசோதகா்களை சமாளித்து வர முடிந்தது. இதுவே கட்டாருக்கு அல்லது வெளிநாட்டிற்கு புதியவராக இருந்தால் அவரின் நிலை என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

ஆகவே கட்டாருக்கு வருபவா்கள் தங்கள் கொண்டு வரும் பொருட்களை சோதித்து கொண்டு வரும்படியும், பொருட்கள் கொடுத்து விடுபவா்கள் மேற்படி வெற்றிலை, பாக்கு போன்ற போதை பொருட்களைச் சார்ந்தவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். (இது ஒரு அனுபவ பகிா்வின் பின் எழுதப்பட்டது) <நன்றி ரெட்பானா>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :