வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளுக்குள் கற்களைவைத்து பொருட்களை திருடி மோசடி



கோட்டை மத்­திய தபால் பரி­வர்த்­தனை பிரி­வுக்கு வெளி­நாட்­டி­லி­ருந்து அனுப்பப்­பட்ட மூன்று பொதிகள் மோசடி செய்­யப்­பட்­டமை தொடர்பில் தபால் நிலைய பொறுப்­ப­தி­காரி, பொதிகள் பிரிவின் பொறுப்­ப­தி­காரி, காரி­யா­லய உத­வி­யாளர், ஊழியர் ஒரு­வரும் உட்­பட எட்­டுப் பேர் கோட்டை பொலி­ஸாரால் நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊட­கப்­ பி­ரிவு தெரி­விக்­கின்­றது.

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி துபா­யி­லி­ருந்து அனுப்­பட்ட மூன்று பொதி­களை உரி­மை­யா­ளர்கள் வந்து பெற்றுக் கொள்­ளாமை தொடர்பில்
ஏற்­பட்ட சந்­தே­கத்­தை­ய­டுத்து குறித்த பொதி­களை திறந்து பார்க்கும் போது அவற்­றுக்குள் பத்­தி­ரி­கைகள் மற்றும் கொங்ரீட் கற்கள் இருந்­த­தாக கோட்டை மத்­திய தபால் பறி­மாற்றுப் பிரிவின் வெளி­நாட்டு தபால் அதி­காரி ஜே.எச். எம். சம­ர­சிங்­கவால் கடந்த மாதம் 8 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­படு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கோட்டை பொலிஸார் மேற் கொண்ட தீவிர விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து மத்­திய தபால் பரி­மாற்று பிரிவில் பணி புரிந்த சிலரால் இந்தப் பொதி­க­ளி­லி­ருந்த பொருட்­களை மாற்றி விட்டு வேறு பொருட்கள் வைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் குறித்த தபா­லக பொறுப்­ப­தி­காரி, பொதிகள் பிரிவின் பொறுப்­ப­தி­காரி, அலு­வ­லக உத­வி­யாளர், ஊழியர் ஒரு­வரும் மேலும் நான்கு பேரும் பொலி­ஸாரால் நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­ட­துடன் இவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து மாற்­றப்­பட்ட பொதி­க­ளுக்­குள்­ளி­ருந்த 173 கைய­டக்க தொலை­பே­சிகள், நான்கு டெப்­களும் பொலி­ஸாரல் புறக்­கோட்­டை­யி­லுள்ள வர்­தக நிலையம் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளன.
இந்த மோச­டியை செய்­வ­தற்­காக மத்­திய தபால் பரி­மாற்றுப் பிரிவின் பணி­பு­ரிந்த சந்­தே­க­ந­பர்­க­ளான அதி­கா­ரி­களால் ஒரு இலட்­சத்து பத்­தா­யிரம் ரூபா பணம் பெற்றுக் கொண்டே இவர்கள் குறித்த பொதியை மாற்­றி­யுள்­ள­தாக பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அழித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கோட்டை நீதிவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட இருந்தனர்.

இது தொடரபில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.metronews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :