சவூதி அரேபியா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ச்சுத்தன்மை கொண்ட பேசில்லஸ் பாக்டரியா கலக்கப்பட்டுள்ள Milchwerke Mittelelbe GMBH தயாரிப்புகளின் சாக்லெட் பானங்களை வாங்கி பருக வேண்டாம் என்று சவூதி அரேபியா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக எதிர் வரும் 19/12/2014 மற்றும் 11/4/2015 தேதிகளில் காலாவதியாகும் தேதி குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்களை வாங்க வேண்டாம் பருக வேண்டாம் என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ள தயாரிப்புகளில் நச்சுத்தன்மை கொண்ட பேசில்லஸ் பாக்டரியா கலக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று SFDA எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதைத் தாயரித்த கம்பெனியே கடந்த மார்ச் மாதம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து சந்தைகளிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தயாரிப்புகளை சவூதி அரேபியா சந்தைகளில் காண்போர் food-dept@sfda.gov.sa என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது via twitter.com/saudi_FDA டிவிட்டர் தளத்திலோ பதிவு செய்யும் படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
குறிப்பு: (பானங்களின் விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன)

SFDA ( Saudi Food and Drug Authority) warns against contaminated chocolate drinks.
Before consuming any of the chocolate drinks produced by Milchwerke Mittelelbe GMBH and listed below, check the expiry date first. If the product is packed in plastic containers and the expiry date is between 19/12/2014 and 11/4/2015, don’t buy or consume them.
This warning comes from the Saudi food and Drug Authority (SFDA), which said in an advisory posted on its website on Monday that such products have been found to be contaminated with bacillus bacteria, which can cause food poisoning.
The statement said the manufacturer itself, a German company, warned of the contamination last March and has withdrawn the affected products from markets in Britain and Ireland, where they were distributed.
Nonetheless, the SFDA urged consumers in the Kingdom to be vigilant and are requested to inform the authority by email at food-dept@sfda.gov.sa or via twitter.com/saudi_FDA, should they find any of the products in local retail outlets.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :