ISIS அமைப்பின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலை நிறுத்த அரசு வழி விடக் கூடாது...!!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

ராக் நாட்டின் பல பகுதிகளையும் சிரியா நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி கலிபாவை நியமித்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி,உலக இஸ்லாமிய எதிரிகளை தங்கள் போராட்ட திறமையால் கதி கலங்கச் செய்து உலகின் மிகவும் பர பரப்பாக பேசப்பட்டு வரும் ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பானது வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளது.

இலங்கையில் தற்போது முஸ்லிம்களிற்கெதிராக நடைபெற்று வரும் இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் முஸ்லிம்கள் வேறு வழி இன்றி எதிர்ப்போரை எதிர் கொள்ள போராட்ட களத்திற்கு உந்தப்படுவார்கள் என்பது வெளிப்படை உண்மை.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட மிக ஏதுவாக அமையும் என்பதில் ஜயமில்லை.

இவ்வாறான அமைப்புக்களின் ஆதிக்கம் இலங்கையில் வரும் போது இலங்கை நாட்டின் முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களும் நிம்மதியை தொலைத்து நிற்பார்கள்.

முஸ்லிம்கள் ISIS அமைப்பின் வலைக்குள் சிக்காது பாதுகாக்க இலங்கை அரசானது இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் இன நல்லுறவை மீண்டும் அழகிய முறையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.இதற்கு மும் மதத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இன ஜக்கியம் இலங்கையில் பேணப்படுமாக இருந்தால் முஸ்லிம்கள் ஒரு போதும் இவ்வாறான அமைப்புக்களிற்கு தங்கள் ஆதரவை வழங்க மாட்டார்கள்.இலங்கை முஸ்லிம்களின் ஆதரவின்று அவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது.ஈராக்கை அவர்கள் இவ்வளவு எளிதில் கைப்பற்ற அந் நாட்டு மக்கள் ஆதரவு அவர்களிற்கு மிகைத்திருப்பது தான் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்க மேலு மொரு விடயம்.

இன நல்லுறவின்மை நீடித்தால் இவ்வாறான இயக்கங்கள் மூலம் எவரும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே இலங்கையில் இவ்வாறான அமைப்புக்கள் உருவெடுக்காமல் பாதுகாப்பது அரசின் கடமை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :