அருகில் இருக்கும் நண்பர்களை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு - காட்டிக் கொடுக்கும் பேஸ்புக்..

நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருக்கும் நண்பர்களை இனி பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ளலாம்.7

 இதற்காகவே பேஸ்புக் புதிய Mobile Application ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது.

குறித்த அப்பிளிகேசனை பயன்படுத்தும் போது அருகில் நண்பர்கள் இருந்தால் தகவல் தரப்படும்.

இந்த அப்பிளிகேசனை பயன்படுத்துபவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் தெரிவு செய்து பயன்படுத்தும் வசதியும் உண்டு.

நெருங்கிய நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்று தனக்கென தனிவட்டம் அமைத்தும் பயன்படுத்தலாம். இது geolocation தொழிநுட்பம் மூலம் சாத்தியமாகிறது.



ஆனால், இதனை எப்பவும் On / Off செய்ய முடியும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் இந்த தொழிநுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்.

உங்களின் இருப்பிடத்துடன் உங்களுக்கு அருகில் இருக்கும் நண்பர்களின் இருப்பிடத்தையும் இணைக்கும் இணைப்பு பாலமாகவும் இனிவரும் காலங்களில் பேஸ்புக் தொழிற்படப் போகின்றது.



உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நண்பனுக்கு போன் செய்தால், கொழும்பிலை இருக்கிறேன் மச்சான் என்று பொய் சொல்லி ஏமாற்ற முடியாது.

காட்டிக் கொடுத்துவிடும் பேஸ்புக்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :