குடித்து கும்மாளம் போட்ட பலசேனாக்கள் - இவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது-விஜித தேரர்



-MM-


வர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது. இவர்களை இயக்கும் மறைவான சக்தி எது. நான் ஒரு ஆளும் தரப்பு அரசியல் பிரதிநிதியாக இருந்தும் எனது நிலை இவ்வாறென்றால் ஒரு சாதாரண குடிமகனின் நிலையை எவ்வாறு விவரிப்பது?’ என மிகக் கவலையுடன் வினா தொடுத்தார்.

உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வடரேக விஜித தேரர் தெரிவித்திருக்கும் கருத்துக்களே இவை.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேறி தமது வாழ்விடங்களை தாமே சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் பற்றி பொதுபலசேனாவினால் கிளப்பப்பட்டிருக்கும் புரளி சம்பந்தமாக நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் கடந்த ஐந்தாம் திகதி மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு நானும் இன்னும் சில பிக்குகளும் பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு பல முக்கிய தகவல்களை திரட்டி வந்தோம்.

அத்தகவல்களில் தற்போதைக்கு அப்பிரதேசத்தில் குடிசைகளை அமைத்துக்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அநாதரவாக வாழும் அப்பாவி முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டுக்கு முன் அப்பிரதேசத்தில் நிரந்தரமாக வாழ்ந்தவர்கள் என்பதை அத்தாட்சிப்படுத்தும் பல முக்கிய ஆவண ஆதாரங்களை நாம் திரட்டியிருந்தோம்.

குறிப்பாக பழைய கிணறுகள் மற்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய பள்ளிவாயில் (தற்போதைக்கு இப்பள்ளிவாயில் கடற்படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது) போன்ற தடயங்கள் அடங்கிய புகைப்படங்கள் போன்றவற்றை நாம் திரட்டியிருந்தோம்.

அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஞானசார தேரர் உட்பட பொதுபலசேனா அமைப்பினர் வில்பத்து காட்டுப் பகுதியில் மது அருந்தி குடித்து கும்மாளம் அடிதுள்ளதற்கான அத்தாட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் நாம் கையுடன் கொண்டு வந்தோம்.

சுமார் இருபத்தி ஐந்து வெற்று மது போத்தல்கள் அங்கு காண கிடைத்தது. அத்துடன் இத்தேரேர்கள் மது அருந்திவிட்டு கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ள பதிவுகளும் குறிப்பிட்ட வீடியோ பதிவில் அடங்கியிருந்தது.

இவ் வீடியோப்பதிவை சில தினங்களுக்கு முன் பொதுபலசேனா அமைபினருடன் குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு வழிகாட்டியாக சென்ற இன்னுமொரு பிக்குவால் பதியப்பட்டிருந்தது. ஆகவே இந்த பொதுபலசேனா என்ற அமைப்பு உண்மையில் பௌத்த தர்மத்தை பாதுகாக்க ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பல்ல.

மாறாக இந்தநாட்டில் பல நூறு வருடங்களாக அன்னயோன்ய உறவுடன் வாழும் சமூகங்களுக்கு மத்தியில் அனாவசிய பிளவுகளை ஏற்படுத்தி இந்த நாட்டை மீண்டும் பாதாளத்தில் தள்ளிவிட எத்தனிக்கும் வெளிநாட்டு உதவிகளில் இயங்கும் அமைப்பு என்ற விடயத்தை பல ஆதாரங்களுடன் நாட்டுக்கும் அரசுக்கும் அம்பலப்படுத்தும் நோக்கிலேயே நாம் நிப்போன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஊடகவியலாளர் சந்திப்பு திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தால் அவர்களின் வேஷம் உலகிற்கு தெரியவந்திருக்கும். இவ்விடத்திற்கு அடாவடித்தனமாய் உள்நுழைந்த அவர்கள் நடந்து கொண்ட விதம் இன்று முழு உலகுமுமே கண்டுகொண்டது. என்னை பலமுறை கிள்ளினார்கள். அப்போதும் அவர்கள் மது அருந்தி விட்டுத்தான் அங்கு வந்திருந்தார்கள்.

ஞானசார தேரரிடம் மது வாடை வீசியது. யாரும் அறியாத வகையில் என்னை அடித்தார்கள். அவர்கள் எழுதி வைத்ததை ஊடகத்திற்கு வாசிக்குமாறு அச்சுறுத்தினர். நான் அதை கடைசி வரை மறுத்து விட்டேன். பின்பு என்னை கண்டம் துண்டமாக வெட்டி ஆற்றில் வீசுவதாக அச்சுறுத்தினார்கள். மேற்குறித்த தகவல்கள் அடங்கிய ஐந்து கோப்புகளை இவர்கள் பறித்தெடுத்தார்கள்.

இறுதியில் எனது உயிருக்கு பயந்து நான் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உருவானது. ஆனால் எமது இந்த புண்ணிய பூமியை இது போன்ற நாசகாரர்களுக்கு தாரை வார்க்க முடியாது. ஆகவே எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது. அவர்கள் கொண்டுசென்ற தஸ்தாவேஜூக்களின் சிலவற்றின் மூலப் பிரதிகள் இன்னும் என்னிடமுண்டு.

கூடிய விரைவில் அவற்றை நான் தருணம் பார்த்து வெளியிடுவேன். நான் இந்த நாட்டு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேட்கும் விடயம் என்ன வென்றால் இந்த நாட்டில் எழுதப்பட்ட யாப்பின் அடிப்படையிலேயே ஆட்சி செய்யப்படுகிறது என்ற விடயம் உண்மையானால் சட்டத்தின் ஆதிபத்தியம் தற்போதும் அமுலில் உள்ளதென்றால் பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்னாள் எனது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு எனது அடிப்படை உரிமை மீறப்படும் போது அதுவும் அகிம்சையை போதிக்கும் பௌத்த மதத்தின் பெயரால் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்திய இந்த அநீதிகள் நடக்கும் போது, குறிப்பாக பொலிஸ் உயரதிகாரிகள் பலர் முன்னிலையில் என்னை மிரட்டும் போது இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது வரைக்கும் இந்த அநியாய காரர்கள் சுதந்திரமாக செயல்படுவதன் ரகசியம் என்ன என்பது தான் எனது கேள்வியாக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :