மாயமான மலேசிய விமானம் பற்றி வெளியாகிய அதிர்ச்சித்தகவலால் பரபரப்பு



மா
யமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டியின் பேட்டரி செயலிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8 - ந் தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்து நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 200 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில், 11 ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு சிவில் விமானம் இணைந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே விமானத்தின் கறுப்பு பெட்டியின் சமிக்ஞைகள் கடந்த 8 - ந் தேதிக்கு பிறகு கேட்காததால், அதன் பேட்டரி செயலிழந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதனால் தேடும் பகுதியின் சுற்றளவு நேற்று குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாயமான விமானம் மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக அவசர அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் விமானத்தின் வேகம் காரணமாக செல்போன் 'டவர்' மாறியதால், இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டதாகவும், மலேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த தகவலை அந்நாட்டு போக்குவரத்து மந்திரி சாமுத்தின் உசேன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த தகவல்கள் குறித்து உரிய துறையினரால் உறுதி செய்யப்படும் வரை, இது குறித்து எதுவும் கூற முடியாது' என்றார்.

மாயமான விமானம் குறித்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாகவும், அவற்றை ஆய்வு செய்யும்போது, உண்மை எதுவுமில்லை என்றும் கூறிய அவர், 'எனக்கு தெரிந்த வரையில், மாயமான விமானத்தில் இருந்து அவசர அழைப்பு எதுவும் விடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

மேலும், விமான மர்மம் குறித்து மலேசிய போலீஸ் மட்டுமின்றி எப்.பி.ஐ., எம்.ஐ. 6, சீன உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருவதால், அதற்கு இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியதாகவும், விமானம் தற்போது ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளதாகவும் ரஷிய உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா அல்லது சீனாவை மிரட்டும் நோக்கில் தீவிரவாதிகள் இதை செய்திருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விமானம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், அது கடத்தப்பட்டதாகவும் ஆப்கன் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிருடன் உள்ளதாக ரஷிய செய்தித்தாளான 'மாஸ்கோ ஸ்கை' தெரிவித்துள்ளது. தற்போது உடைந்த இறக்கையுடன் ஆப்கானிஸ்தான் மலையோர பகுதியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், பயணிகள் அனைவரும் உணவு எதுவும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :