Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email: news@importmirror.com impordnewss@gmail.com 0776144461 - call: 0724400033 Admin-message
Headlines

Admin-message

ஏழு வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை- கேகாலையில் சம்பவம்.


பாடசாலை சென்ற 7 வயது மாணவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப் பட்டுள்ளான். கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகரடுபன பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ள மாணவனின் சடலம் பாடசாலை சீருடையுடன் கேகாலை நிம்மல்கொட வத்த பிரதேசத்திலுள்ள 103 இலக்க பாழ டைந்த வீடொன்றின் சமையலறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை வல கம்பா பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயி லும் 7 வயதுடைய வஹம்புரகே புஷ்பகுமார என்ற சிறுவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந் துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

இந்த மாணவனை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வலகம்பா பாடசாலையில் 2ம் தரத்தில் கல்வி பயிலும் புஷ்பகுமார என்ற 7 வயது மாணவன் வழமை போன்று நேற்று முன்தினம் காலை பாடசாலை வானில் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இந்த மாணவன் மாலை வரை வீடு திரும்பாததையடுத்து பீதியடைந்த குறித்த மாணவனின் பெற்றோர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்த பொலிஸார் நில்மல் கொடவத்தை பிரதேசத்திலுள்ள 103ம் இலக்க பாழடைந்த வீடொன்றின் சமையலறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இதன் போது சிறுவன் பாடசாலை சீருடையுடனே கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடிக் கைது செய்யும் பொருட்டு சப்ரகமுவ பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹேஷ் பெரேரா விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் 24 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என ஆரம்பகட்டமாக தெரியவந்துள்ளது.

காலையில் பாடசாலை சென்ற மாணவன் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டியில் சந்தேக நபர் சிறுவனை கடத்திச் சென்று ள்ளார். குறித்த வீட்டிற்கு அழைத்துச் சென்று ள்ள சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, இம்சைப்படுத்திய நிலையிலே கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற கேகாலை மஜிஸ்திரேட் நீதவான் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

Powered by Blogger.

செய்திகளை உடனுக்குடன் Facebook வாயிலாக அறிய கீழே உள்ள Like ஐ ஒருமுறை அழுத்தவும்

Powered By FarhacoolWorks