பங்களாதேஷ் கட்டிட விபத்தில் 275 பேருக்கு மேல் உயிரிழப்பு.


 தேவேளை நேற்று  மாலை 41 பேர் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களில் 2000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் பாதிக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் 1000 பேர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடம் பாதுகாப்பற்றது என்ற எச்சரிக்கையையும் மீறி 3,122 பேர் அங்கு பணியாற்றி வந்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களே மேற்படி கட்டிடத்தில் இருந்துள்ளன.

விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள்  உறவினர்களால் அடையாளங் காணப்படும் பொருட்டு அருகில் உள்ள பாடசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கட்டிடத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் அதன் உரிமையாளர் அவற்றைப் பொருட்படுத்தவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பை பொருட்படுத்தாமல் வேலையை தொடரும் படி வற்புறுத்தப்பட்டதாகவும் அதையும் மீறி வேலைக்கு வராத பட்சத்தில் பணி நீக்கம் செய்யப்படுவோம் என  தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் உரிமையாளர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :