அக்கரைப்பற்றில் பால் நிலைசார் வன்முறை தடுப்பு (MWRAF) 2 நாள் பயிற்சி

Share on


 ( எம்.ஐ.முஹம்மட் பைஷல் )

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பால் நிலைசார் வன்முறை தடுப்பு மைய ஏற்பாட்டின் கீழ் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) அனுசரணையில் ஆண், பெண் இருபாலருக்குமான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றன.

இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமையும், இன்று புதன் கிழமையும் (2012.12.04,05) நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறைகள் காலை 9 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்  (MWRAF)  பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல் தலைமையில் அஷ்ஷெய்க் ரவுப் ஷெயின், அப்துல் மர்சூக் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உலநல சேவை மையத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபல் ஆகியோர் பிரதம வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் கொண்டுவரப்பட்ட 1325 பிரேரனையைக் கருவியாகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறையில் பெண்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பன பற்றியும் இதனுடன் தொடர்புபட்ட இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள் பற்றியும் கொண்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி பட்டறைக்கு பல தரப்பட்ட அரச உத்தியோகத்தர்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்கள், சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 50 இக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பங்குபற்றினர்.

அத்துடன் நிறுவனத்தின் ஆலோசகர் சியமலா கோமஸ், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் விகிதா ரங்கநாதன் மற்றும் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் நதீரா ஷாலிஹ் ஆகியோர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :